தீப வழிபாட்டில் சிறப்பானது ‘கார்த்திகை தீபம் ஆகும்.’இது கார்த்திகை மாதத்தில் பெளர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது.
‘அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்’
என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.
பிறவிப் பிணி தீர வாழ்வில் எல்லா நலன்களும் பெற கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையான் அடிக் கமலம் சென்று தொழுது முற்பிறவியில் செய்த பாவங்களைப் போக்கி நன்மை அடைவோம்...
paakka job
ReplyDelete