Friday, July 29, 2011

நடராஜர் சதகம்

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை

சிவகாமியாட,

மாலாட நூலாட மறையாட திறையாட

மறைதந்த பிரம்மனாட,

கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,

குஞ்சர முகத்தனாட,

குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட

குழந்தை முருகேசனாட,

ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு

முனியட்ட பாலகருமாட,

நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட

நாட்டியப் பெண்களாட,

வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை

விருதோடு ஆடிவருவாய்

ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற

தில்லைவாழ் நடராசனே!





2 comments:

  1. இப்பாடல் நடராஜர் பத்து எனும் தொகுப்பில் உள்ளது. நடராஜர் சதகம் பற்றி காண http://natarajadeekshidhar.blogspot.in/2011/06/blog-post.html

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...