Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

Sunday, March 11, 2012

திருநாவுக்கரசு சுவாமிகள் பாடல்

ஓசை ஒலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிது மினியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ!

Thursday, March 1, 2012

திருவண்ணாமலை திருத்தல பாடல்

விண் ஆளும் தேவர்க்கும் மேல்ஆய வேதியனை
மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்புஆகி நின்றானைத்
தண் ஆர் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்
பெண் ஆளும் பாகனைப் பேணு பெருந்துறையில்
கண் ஆர் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணாமலையானைப் பாடுதும்கான் அம்மானை!!!

Friday, July 29, 2011

நடராஜர் சதகம்

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை

சிவகாமியாட,

மாலாட நூலாட மறையாட திறையாட

மறைதந்த பிரம்மனாட,

கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,

குஞ்சர முகத்தனாட,

குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட

குழந்தை முருகேசனாட,

ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு

முனியட்ட பாலகருமாட,

நரை தும்பை யறுகாட நந்திவாகனமாட

நாட்டியப் பெண்களாட,

வினையோட உனைப்பாட யெனைநாடியிதுவேளை

விருதோடு ஆடிவருவாய்

ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற

தில்லைவாழ் நடராசனே!





Monday, October 18, 2010

தேவாரம்

பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!
 எத்தான் மறவாதே நினைக்கின்றேன், மனத்துன்னை
வைத்தாய், பெண்ணைத் தென்பால் வெண்ணைநல்லூ [ரருட்டுறையுள்]
அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...