சிவனுக்கு மிக உகந்தது வில்வம். வில்வமரத்தை சிவ ஸ்வரூபமாகவே பார்ப்பர் வில்வ மரத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம், நடுப்பகுதி விஷ்ணுபாகம், மேல்பகுதி சிவரூபம். சிவபெருமானை வில்வத்தால் அர்ச்சித்தால் மும்மூர்த்திகளையும் வழிபாடு செய்த புண்ணியம் கிடைக்கும்.
வில்வம், பாதிரி, வன்னி, மந்தாரை, மா ஆகிய ஐந்து மரங்களையும் தேவலோகத்திலிருந்து வந்த "பஞ்சதருக்கள்' என்று புராணங்கள் கூறுகின்றன.பில்வாஷ்டகம் என்கிற சுலோகங்கள், சிவபெருமானுக்கு அர்ச்சிக்கின்ற வில்வதளங்கள் எப்பேர்பட்ட நற்பலன்களைக் கொடுக்குமென்பதை அழகாக வர்ணிக்கிறது.இது ஒரு புனித மரம் .இதன் அனைத்து பாகங்களும் இலை வேர் , கிளை பழம் ,விதை அனைத்தும் மருத்துவ குணம் உடையது. மனிதனின் கொடிய வியாதியையும் ,வினையும் ஒரு சேர தீர்க்கவல்லது
No comments:
Post a Comment