வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
முருகப் பெருமானுக்கு உகந்த நாள் வைகாசி விசாகம். அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது உறுதி.
குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால் அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழுவது உறுதி. திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
அன்றைய தினம் பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து ஆறுமுகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்வர். அன்றைய தினம் விரதமிருந்து ஒரு வேளை உணவு உண்டு முருகனை தியானிடத்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
தர்மபுரி குமாரசாமி பேட்டை.
அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் .
அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் .
24-05-2013 வெள்ளிக்கிழமை காலை ஆறுமுகப் பெருமானுக்கு சிறப்பு அபிசேகம் மாலையில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.
மயில் மீது வலம் வருபவனே! வேதத்தின் உட்பொருளாய் திகழ்பவனே! கண்டவர் மனம் கவரும் அழகனே! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமே! சிவபெருமானின் புதல்வனே! முருகப்பெருமானே! உன்னைச் சரணம்அடைகிறோம்.
No comments:
Post a Comment