Wednesday, April 24, 2019

#சித்திரை #திருவோணம் மஹா அபிஷேகம்:

நிகழும் மங்களகரமான விகாரி ஆண்டு சித்திரை திங்கள் 14 ஆம் நாள் 27-04-2019 சனிக்கிழமை அருள்மிகு சிவகாம சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மத் ஆனந்த #நடராஜர் சபையில் எம்பெருமானுக்கு சித்திரை திருவோணத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் மங்களஇசை,கலச ஸ்தபனம், சங்கல்பம்

அம்பலக் கூத்தனுக்கு 16 வகையான சுகந்த பரிமள திரவியங்கள் கொண்டு மஹா அபிஷேகம்
அதனைதொடர்ந்து அலங்காரம்,சோடச உபசாரம்,வேத பாராயணம்,பஞ்ச புராணம் பாராயணம்,மஹாதீபாராதனை நடைபெறும்.


Thursday, April 20, 2017

அம்பலக் கூத்தனுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகம்:

தேவர்கள் தினமும் ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம். அவர்களுக்கு ஒரு நாள் என்பது, பூலோகத்தில் ஒரு ஆண்டுக்குச் சமமானது. இதன் அடிப்படையில், சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜர் அபிஷேகம் நடக்கிறது.
ஆண்டுக்கு ஆறு அபிஷேகம்: ஆடல் வல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகம விதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
"சித்திரை ஓணமும் சீரானியுத்திரமாம்
சத்ததனு ஆதிரையும் சார் வாளும் - பத்திமிகு
மாசியரி கன்னி மருது சதுர்த்தசி மன்
றீசர பிடேக தினமாம்''
01. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் தேவர்களின் அதிகாலை பூஜை (தனுர் மாத பூஜை)சிறப்பு அபிஷேகம், நடராஜர் உற்சவம்.
02. மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி தேவர்களின் காலை சந்தி பூஜை அபிஷேகம் மட்டும்.
03. சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரம் தேவர்களின் உச்சிக்கால பூஜை அபிஷேகம் மட்டும்.
04. ஆனி மாதம் உத்திர நட்சத்திரம் தேவர்களின் சாயங்கால பூஜை சிறப்பு அபிஷேகம், நடராஜர் உற்சவம்.
05. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி தேவர்களின் இரண்டாம் கால பூஜை அபிஷேகம் மட்டும்.
06. புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி தேவர்களின் அர்த்தஜாம பூஜை அபிஷேகம் மட்டும்.
அந்த வகையில் இன்று (20.04.2017) ஹேவிளம்பி ஆண்டு முதல் நடராஜர் அபிஷேகம் சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் காலை 10 மணிக்கு அம்பலக் கூத்தனுக்கு 16 வகை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற உள்ளது இதில் அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல பொற்சபை நாயகன் திருவருள் பெறுவோம்.

Wednesday, April 19, 2017

சித்திரை திருவோணம் மஹா அபிஷேகம்:


சித்திரை திருவோணம் மஹா அபிஷேகம்:
நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி ஆண்டு சித்திரை திங்கள் 07 ஆம் நாள் 20-04-2017 வியாழக்கிழமை சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜர் சபையில் காலை 10 மணிக்கு மங்களஇசை, கலசஸ்தாபனம், ஆடல்வல்லானுக்கு 16 வகை திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம்,சிறப்பு அலங்காரம், சோடசஉபசாரம், வேத பாராயணம், பஞ்ச புராணம், திருமுறை பாராயணம், மஹாதீபாராதனை நடைபெறும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...