:
நிகழும் மங்களகரமான மன்மத ஆண்டு மார்கழி திங்கள் 10 ஆம் நாள் திருவாதிரை நட்சத்திரம் 26-12-2015 சனிக்கிழமை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தி சபையில் காலை 4.30 மணியளவில் (வைகறையில்) 16 வகை அபிஷேக திரவியங்கள் கொண்டு ஆடல்வல்லப்பெருமானுக்கு திருவாதிரை அபிஷேகமும்,சோடசஉபசாரம்,வேத பாராயணம்,திருமுறை பாராயணம்,மஹா தீபாராதனை அதனை தொடர்ந்து ஆருத்ரா தரிசனம்(தங்கக் கவசத்துடன்)நடைபெறும்.
காலை 6-00 மணியளவில் திரு ஆபரண அலங்காரக் காட்சியுடன் சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜ ராஜ மூர்த்தி மற்றும் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருநடன திருவீதி உலா வெகு சிறப்பாக நடைபெறும்.
அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு ஆனந்த நடராஜர் திருவடிகளை வணங்கி அளவில்லாத ஆனந்தம் பெறுவோம்.
No comments:
Post a Comment